Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Check TN TRB Exams Result: ஆசிரியர் துறைக்கான தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு….! இப்பொவே செக் பண்ணுங்க...

Gowthami Subramani July 06, 2022 & 17:45 [IST]
How to Check TN TRB Exams Result: ஆசிரியர் துறைக்கான தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு….! இப்பொவே செக் பண்ணுங்க...Representative Image.

How to Check TN TRB Exams Result: 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் பட்டதாரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களையும் இந்த பகுதியில் காணலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2020-21 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பதவிகளுக்குத் தேர்வு நடத்தியது. அதன் படி, இதற்கான முடிவுகளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் TN TRB PG Assistant தேர்வுக்கான முடிவை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (Check TN TRB Exams Result 2022).

TN TRB PG Assistant, Computer பதவிக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை முறையில் நடைபெற்ற தேர்வாகும் (TN TRB PG Assistant Results 2022).

இந்த பதவிக்கான Answer Key கடந்த ஏப்ரல் 9 ஆம் நாள் வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்களிடம் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதனை ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியது. அதன் படி, TN TRB PG Assistant பதவிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

TN TRB PG Assistant 2022 தேர்வு முடிவைப் பதிவிறக்கம் செய்வது எப்படி…? (How to Check TN TRB Exams Result)

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://trb.tn.nic.in/ என்ற இணையளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதன் முகப்புப்பக்கத்தில் இருக்கும் “முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I – 2020-21 பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு – இறுதி தேர்வு முடிவுகளை வெளியிடுதல்” என்ற இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்யும் போது, புதிய வலைப்பக்கம் திறக்கும்.

இந்தப் பகுதியில் “முடிவுகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்” என்ற இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், User ID மற்றும் Password போன்றவற்றை உள்நுழைத்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், எதிர்காலப் பயன்பாட்டிற்காக இந்த தேர்வு முடிவைப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்