Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 6

Gowthami Subramani July 08, 2022 & 15:30 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 6Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் இன்னும் சில போட்டித் தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள நமது searcharoundweb என்ற இணையதளத்தில் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

1. “ஏ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

அ. நெருப்பு                                      ஆ. அரண்

இ. அம்பு                                            ஈ. தலைவன்

விடை: இ) அம்பு

2. தமிழ்ச் சொல்லை கண்டறிக:

அ. ஈசன்                                            ஆ. குபேரன்

இ. அனுமதி                                      ஈ. மணிமுடி

விடை: ஈ) மணிமுடி

3. மிசை – எதிர்ச்சொல் காண்க.

அ. கீழ்                                               ஆ. விசை

இ. நாள்                                             ஈ. இசை

விடை: ஈ) இசை

4. குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி, கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

அ. குழலியின் பாடத்தெரியும்   ஆ. குழலிக்குப் பாடத்தெரியும்

இ. குழலியால் பாடத்தெரியும்   ஈ. குழலி பாடத்தெரியும்

விடை: ஆ) குழலிக்குப் பாடத்தெரியும்

5. பொருந்தா இணையைச் சுட்டுக.

அ. குறிஞ்சி – யாமம்                     ஆ. நெய்தல் – எற்பாடு

இ. முல்லை – மாலை                    ஈ. மருதம் - நண்பகல்

விடை: ஈ) மருதம் - நண்பகல்

6. பொருத்துக.

வேற்றுமை                                      உருபு

a. நான்காம் வேற்றுமை               1. இன்

b. ஐந்தாம் வேற்றுமை                  2. அது

c. ஆறாம் வேற்றுமை                    3. கண்

d. ஏழாம் வேற்றுமை                     4. கு

            a          b          c          d

அ.       1          4          3          2

ஆ.      4          1          2          3

இ.       3          2          1          4

ஈ.        2          3          4          1

விடை: ஆ)    4          1          2          3

7. தாயுமானவர் ஆற்றிய பணி எது?

அ. தட்டச்சு பணியாளர்               ஆ. இசைப்பணியாளர்

இ. பத்திரிக்கையாளர்                  ஈ. அரசுக்கணக்கர்

விடை: ஈ) அரசுக்கணக்கர்

8. தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?

அ. ஜான்சிராணி                                        ஆ. நாகம்மை

இ. தில்லையாடி வள்ளியம்மை             ஈ. திலகவதி

விடை: இ) தில்லையாடி வள்ளியம்மை

9. தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசியர்களில் ஒருவர்

அ. ஜோசப் கொன்ஸ்டான்                      ஆ. ஜேம்ஸ் பிராங்கா

இ. ஜி.யு.போப்                                              ஈ. ஆறுமுக நாவலர்

விடை: ஆ) ஜேம்ஸ் பிராங்கா

10. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

அ. ஜி.யு.போப்                                 ஆ. ஷெல்லி

இ. கால்டுவெல்                               ஈ. வீரமாமுனிவர்

விடை: அ) ஜி.யு.போப்

11. “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்

        வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று

தமிழின் பெருமைகளைப் பறைசாற்றியவர் யார்?

அ. பெருநாவலர்                                         ஆ. பெருங்குன்று கிழார்

இ. பாவலரேறு பெருஞ்சித்திரனார்      ஈ. பாவேந்தர் பாரதிதாசன்

விடை: இ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

12. உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?

அ. நிகோலஸ்கிராப்ஸ்                            ஆ. சி.வி.இராமன்

இ. தாமஸ் ஆல்வா எடிசன்                     ஈ. கலீலியோ

விடை: ஈ) கலீலியோ

13. “துரை மாணிக்கம்” என்பது இவரின் இயற்பெயர்

அ. கவிஞர் மீரான்                                     ஆ. கவிஞர் சுரதா

இ. பெருஞ்சித்திரனார்                             ஈ. பாரதிதாசன்

விடை: இ) பெருஞ்சித்திரனார்

14. பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

அ. தெ.பொ. மீனாட்சி சுந்தரம்              ஆ. மு.சி.பூர்ணலிங்கம்

இ. எல்.வி.இராமசுவாமி                            ஈ. கே.வி.சுப்பையா

விடை: ஆ) மு.சி.பூர்ணலிங்கம்

15. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

அ. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்        ஆ. சீனி. வேங்கடசாமி

இ. வ.சுப. மாணிக்கம்                               ஈ. சி.வை.தாமோதரம்

விடை: அ) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்