Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Group 3 Vacancies: மாதம் 76,000 ரூபாய் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

Gowthami Subramani May 23, 2022 & 17:30 [IST]
TNPSC Group 3 Vacancies: மாதம் 76,000 ரூபாய் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…! Representative Image.

TNPSC Group 3 Vacancies: 2022 ஆம் ஆண்டிற்கான புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (TNPSC Group 3 Vacancies).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Executive Officer

காலிப்பணியிடங்கள்

42

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்

மே 19, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 17, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிக்கு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை துணை சேவையின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Executive Officer

42

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Executive Officer

ரூ. 20,600 முதல் ரூ. 75,9000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (TNPSC Group 3 Posts).

விண்ணப்பதாரர்கள், பல்கலைக் கழக மானியக் குழுவால், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்     ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (TNPSC Group 3 Posts List).

துறை

வயது வரம்பு

SC, SC(A), ST, MBC/DC, BC

குறைந்தபட்ச வயதுவரம்பாக 25-ஐக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை

மற்றவர்கள் (SC, SC(A), ST, MBC/DC, BC இல்லாதவர்கள்)

குறைந்தபட்ச வயதாக 25 வயதையும், அதிகபட்ச வயதாக 37 வயதைக் கொண்டிருப்பவதாரகவும் இருக்க வேண்டும்

 

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு முதற்கட்டமாக ரூ. 150-ஐச் செலுத்த வேண்டும். இந்த ஒரு முறை ஆன்லைன் பதிவின் மூலம் 5 வருடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி-க்கான குரூப் தேர்வுகளை எழுதலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
  • அதில், தேர்வு பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணியிடங்களின் ஒதுக்கீடு விதிமுறைகளின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
  • மேலும், பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியானவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் அழைக்கப்படுவர்.
  • அதனைத் தொடர்ந்து கடைசியாக, இறுதித் தேர்வுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (TNPSC Group 3 Apply Online Link).

  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் முதலில் ஒரு முறை ஆன்லைன் பதிவு செய்முறையை முடித்திருக்க வேண்டும்.
  • டிஎன்பிஎஸ்சி-யின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்க்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் உள்ள அறிவிப்பைச் சரிபார்த்து மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்