Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்னீபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் விண்ணப்பிக்கும் கடைசி நாள்!

Priyanka Hochumin November 08, 2022 & 11:15 [IST]
அக்னீபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் விண்ணப்பிக்கும் கடைசி நாள்!Representative Image.

இந்திய விமானப்படையில் சமீபத்தில் அறிமுகமான  அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களாக இருக்க வேண்டும். இது குறித்து முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பணியின் பெயர்: Agniveer விமானப்படை வீரர்கள்

வயது வரம்பு: அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும். 27 டிசம்பர் 2005 மற்றும் 27 ஜூன் 2022 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன், இடைநிலை(10,+2) சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தகுதி பெற்றிருந்தால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

உங்களின் விண்ணப்பம் தேர்ச்சி பெற்ற பிறகு - ஆன்லைன் எழுத்து முறை தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு Document Verification, eligibility test, physical fitness test, medical examination போன்றவை நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிய முடியும். மிகவும் முக்கியமான ஒன்று, இந்த திட்டத்தின் வேலை செய்பவர்கள் வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்திய விமானப்படையில் பணியாற்ற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படையில் சேர விரும்புவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்.

முக்கிய அறிவிப்பு:

விண்ணப்பம் தொடக்கம் நாள்: 07.11.2022

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 23.11.2022

ஆன்லைன் தேர்வு நாள்: 18.01.2023 முதல் 24.02.2023 வரை.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்