Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 27 & 28 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani September 03, 2022 & 17:00 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 27 & 28 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 27 மற்றும் 28 ஆம் நாட்களுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

DRDO புதிய தலைவர்

2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: சமீர் V காமத்

மூத்த அறிவியலாளராக விளங்கும் Dr. சமீர் V காமத், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நடுவண் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகப் பொறுப்பேற்ற Dr G சதீஷ்க்குப் பிறகு இவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். முன்னதாக, Dr. சமீர் V காமத் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் DRDO-ல் கடற்படை அமைப்புகளின் இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஆவார்.

இந்தியப் பொருளாதார நிபுணர்

பன்னாட்டு செலவாணி நிதியத்தில், இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்திய பொருளாதார நிபுணர் யார்?

விடை: K. சுப்ரமணியன்

பன்னாட்டு செலவாணி நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான K V சுப்ரமணியன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் படி, K V சுப்ரமணியனின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது மறு ஆணை வரும் வரை தொடரும் எனக் கூறப்படுகிறது. தற்போது, சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுர்ஜித் எஸ் பல்லா கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றார். இவரது பணிக்காலம் அக்டோபர் 30-ல் நிறைவடைகிறது.

முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம்

‘இயற்கை குறியீடு (Nature Index) – 2022’ தரவரிசையில், எந்த பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?

விடை: ஹைதராபாத் பல்கலைக்கழகம்

ஹைதராபாத் பல்கலைக்கழகம், சமீபத்திய நேச்சர் இன்டெக்ஸ் – 2022 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதில், நேச்சர் இன்டெக்ஸ் என்பது இயற்கை மற்றும் இயற்பியல் அறிவியலில் உயர்தர ஆராய்ச்சிகளைத் தர மேம்படுத்தும் ஒரு குறியீடாக உள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகம், இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தையும், கல்வித்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களில் 16 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. 2021 ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் 2022 மார்ச் 31 வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை உள்ளது.

வரி பகிர்ந்தளித்தல்

நடுவணரசு வசூலிக்கக் கூடிய வரியில், எத்தனை சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது?

விடை: 41%

தற்போது, ஒரு நிதியாண்டில் நடுவணரசு வசூலிக்கும் வரியில் 41%, 14 தவணைகளாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், ரூ. 1.16 லட்சம் கோடி நிதி, இரண்டு தவணைகளாக நடுவணரசு, மாநில அரசுகளுக்கு சமீபத்தில் வழங்கியது.

பரிவார் கல்யாண் அட்டைத் திட்டம்

எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம், பரிவார் கல்யாண் அட்டைத் திட்டத்தைத் தொடங்கியது?

விடை: உத்திரப் பிரதேசம்

உத்திர பிரதேசம் மாநில அரசாங்கத்தின் குடும்ப அடையாள அட்டைத் திட்டமாக பரிவார் கல்யாண் அட்டைத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் குறித்த ஒருங்கிணைந்த தரவுத் தளத்தை நிறுவவும், இதன் பல்வேறு திட்டங்களுக்குப் பயனாளிகளை அடையாளவும் காணவும் இது பயன்படுகிறது. PKC ஆனது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட பன்னிரண்டு இலக்க அடையாள எண்ணை வழங்கும். மேலும், PKC உடன் இணைந்து மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் தரவை இணைக்க மாநில அரசு அனுமதி தந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்