Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 3 & 4 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 10, 2022 & 16:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 3 & 4 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

National Determined Contribution (NDC)

National Determined Contribution – உடன் தொடர்புடைய துறை எது?

விடை: பருவநிலை மாற்றம்

பாரிசு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் புதுப்புக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புக்கு நடுவண் அமைச்சரவால் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கூட்டமைப்பு மாநாட்டிற்கு, NDC-கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, இந்தியா கடைசியாக 2015 ஆம் ஆண்டு NDC-ஐ சமர்ப்பித்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் GDP-ல் 45% வரையிலான கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு தீவிரத்தைக் குறைக்கவும், மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருள்கள் அடிப்படையில், எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு 50% வரையிலான மின்னாற்றல் திறனை அடைய இந்தியா உறுதி எடுத்துள்ளது.

ராக்கிகர்கி

இது எந்த மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான தலமாகும்.

விடை: ஹரியானா

ஹரியானா மாநிலத்தில், உள்ள இராக்கிகர்கியில் பழங்கால மேடுகள் உட்ப 20 பாரம்பரிய தலங்கள் உள்ளன. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டெல்லியில் உள்ள அனங்டல், லேவில் உள்ள பாறை ஓவிய தளம், போன்றவை அடையாளம் காணப்பட்ட பிற இடங்களாகும்.

இதனைத் தவிர்த்து, இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள காலேஷ்வரம் மகாதேவர் கோவில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிந்தகுந்தாவில் உள்ள பாறை ஓவியம் உள்ளிட்டவை ஆகும்.

ஸ்டார்ட்-அப்கள்

இந்த 2022 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் எத்தனை?

விடை: 75,000

நடுவண் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக விளங்கும் பியூஷ் கோயல் 75,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதை அறிவித்தார். உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை மேம்பாட்டிற்கும், 75,000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதல் 10,000 ஸ்டார்ட்-அப்கள் 808 நாட்கள் மற்றும் சமீபத்திய பத்தாயிரம் ஸ்டார்ட் அப்கள் 156 நாள்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

BCCI அதிகாரி

BCCI நெறிமுறைகள் அதிகாரி மற்றும் குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: வினீத் சரண்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான வினீத் சரண், BCCI-ன் நெறிமுறைகள் அதிகாரி, குறை தீர்ப்பாளர் என இரண்டு பணியிடங்களையும் ஓராண்டாக பதவியேற்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்த ஓய்வுற்ற நீதியரசர் D K ஜைன் அவர்களைத் தொடர்ந்து வினீத் சரண் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். இவர், ஒடிஸா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர். மேலும், இவர் கர்நாடகா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

வரும் 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் எது?

விடை: சீனா

ஒத்தி வைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 ஆம் நாள் முதல் அக்டோபர் 8 ஆம் வரை நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) தெரிவித்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்த திட்டம் இடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்புக் காரணமாக இந்த போட்டி 2023 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதாக கவுன்சில் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்