Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 20, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani July 22, 2022 & 17:20 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 20, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: இதில், ஜூலை மாதம் 20 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மேலும், டிஎன்பிஸ்சி மற்றும் வேறு சில போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை, விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

2022 குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்த 2022 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் எத்தனையாவது இந்தியக் குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதாகும்?

விடை: 15 ஆவது

15 ஆவது தேசிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, நடப்பு ஆண்டான 2022-ல் திரௌபதி முர்முவும், யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். திரௌபதி முர்மு தேசிய  ஜனநாயக் கூட்டணி வேட்பாளர் ஆவார். எதிர்க்கட்சிகளின் வேட்பாலர் யஷ்வந்த் சின்கா ஆவார். நாடாளுமன்றத்தில் இந்த இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் தில்லி மற்றும் புதுச்சேரி, யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தால் நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட “AA” விரிவாக்கம்

அண்மையில், சில பொதுத்துறை வங்கிகள் “AA” சூழலைப்புடன் இணைக்கப்பட்டது. இதன் விரிவாக்கம்

விடை: Account Aggregator

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி, நிதி நிலைத் தகவல் வழங்குநர் (FIP) மற்றும் நிதிநிலைத் தகவல் பயனர் (FIU) என கணக்கு திரட்டி சூழலமைப்பில் செயல்பாட்டில் இருக்கிறது. அதன் படி, கணக்கு திரட்டி அமைப்புடன் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, ஆகியவை கணக்கு திரட்டி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், SBI, UCO, BOB உள்ளிட்ட வங்கிகளும் சோதனை கட்டத்தில் உள்ளன. மேலும், சில வங்கிகள் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன.

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் மன்றம்

முதன் முதலாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் எந்த மாநிலம் AI அடிப்படையிலான டிஜிட்டல் மக்கள் மன்றத்தைத் தொடங்கியது?

விடை: இராஜஸ்தான்

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் உதை உமேஷ் லலித் ஆவார். இவர் இராஜஸ்தானில் நடந்த 18 ஆவது அகில இந்திய சட்டப்பேரவைகள் அதிகாரிகள் கூட்டத்தில் முதல் AI அடிப்படையிலான டிஜிட்டல் மக்கள் மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

மைராஜ் அகமத் கான்

மைராஜ் அகமத் கான் எந்த விளையாட்டு தொடர்புடைய வீரர் ஆவார்?

விடை: துப்பாக்கி சுடுதல்

கொரியாவின் சாங்வோனில் ISSF உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில்,  இந்தியாவில் முன்னணி துப்பாக்கி சுடும் வீரரான மைராஜ் அகமது கான் நாட்டின் முதல் தனிநபர் தங்கத்தை வென்றார். இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலின் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட்-ன் கூட்டுக்குழுமம்

இந்திய கூட்டுக்குழுமமான எந்த குழுமத்திடம் நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிட் ஆனது ஒப்படைக்கப்பட்டது.

விடை: TATA குழுமம்

நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனம் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனத்திடம் வந்த பிறகு, தனியார் மயமாக்கல் செயல்முறை நிறைவடைந்தது. மேலும், இது 2 ஆவது வெற்றிகரமான தனியார்மயமாக்கல் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்