Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 09 & 10, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 09 & 10, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இன்று கடந்த இரண்டு நாள்களின் நடப்பு நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மிஷன் வாத்சல்யா

நாம் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கும் ‘மிஷன் வாத்சல்யா’ என்பது எந்த நடுவண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்?

கடந்த 2009-10 ஆம் ஆண்டு முதல், நடுவண் நிதியுதவி திட்டமான ‘மிஷல் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

தொட்டுணரவியலா கலாச்சார பாரம்பரியத்தைக் காப்பதற்கான மாநாட்டுடன் தொடர்புடைய நிறுவனம்?

UNESCO

2022-26 சுற்றுக்கான, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான UNESCO-ன் 2003 மாநாட்டின் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கு இந்தியா தேர்வாகியுள்ளது. அதன் படி, இந்தியா UNESCO-ன் 2 குழுக்களின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்தியாவின் புதிய ஷெர்பா

பியூஷ் கோயலுக்குப் பிறகு G20க்கான இந்தியாவின் புதிய ஷெர்பாவாக அறிவிக்கப்பட்டுள்ளவர் அமிதாப் காந்த்

அமிதாப் காந்த்

முன்னாள் NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், வணிகம், மற்றும் தொழில்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான இந்தியாவின் புதிய ஷெர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்திய அரசின் அனைத்து டிஜிட்டல் திட்டங்களின் ஒரே களஞ்சியத்தின் பெயர் என்ன?

இந்தியாஸ்டேக். குளோபல்

2022-டிஜிட்டல் இந்தியா வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியா ஸ்டேக் நாலெட்ஜ் எக்ஸ்சேஞ்சில் ஒரு மெய்நிகர் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த Indiastack.global என்பது பிரதமரால் தொடங்கப்பட்டது. இது இந்திய அரசின் அனைத்து முக்கிய திட்டங்களின் ஒரே களஞ்சியமாகும்.

செயலாண்மைத்திறத்தில் உள்ள பெண்களுக்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிற தேதி யாது?

ஜூன் 24 ஆம் தேதியைச் செயலாண்மைத் திறத்தில் உள்ள பெண்களுக்கான உலக தினமாக ஐ.நா பொதுச் சபையானது அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

சீனாவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட PNS தைமூர் என்பது என்ன?

போர்க்கப்பல்

PNS தைமூர் என்பது பாகிஸ்தான் சீனாவிடமிருந்து பெறப்பட்ட இரண்டாம் வகை 054A/P போர்க்கப்பலாகும். ஷாங்காய் நகரத்தில் உள்ள Hudong-Zhonghua கப்பல் கட்டுந்தளத்தில் இந்தக் கப்பல் இயக்கப்பட்டது.

PMAY திட்டமானது எந்த ஆண்டுக்குள், ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

2022

நடப்பு 2022 ஆம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்