Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

AKAL LIGHTING PROJECT: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் திட்டம்! ஹை ஸ்கூல் வாத்தியார்கள் உசார்!!

Priyanka Hochumin March 10, 2022 & 17:50 [IST]
 AKAL LIGHTING PROJECT: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் திட்டம்! ஹை ஸ்கூல் வாத்தியார்கள் உசார்!!Representative Image.

AKAL LIGHTING PROJECT: கரூரில் இன்று சமூகப் பாதுகாப்புத்துறை சார்பில் "அகல்விளக்கு" திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. 

சமீபத்தில் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தை திருமணம் போன்ற பல நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொள்ள ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தபட்டது. 

இந்த திட்டத்தை தமிழக மின்துறை அமைச்சர் திரு V. செந்தில் பாலாஜி அவர்கள் தொடஞ்சி வைத்தார். மேலும் அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 26,085 மாணவிகள் பயில்கின்றனர். நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மேற்கொள்ளும் பிரச்சனைகளை ஏதிர்த்து போராடவும் அதற்கான தீர்வுகளை கண்டறியவும், சமுதாயத்தில் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான முதல் படியாக கருதுகிறோம். 

இத்திட்டத்தில் மொத்தம் 1,521 ஆரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் யுனிசெப் பயிற்றுநர்களை கொண்டு 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்பு அவர்களுக்கு கீழ் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 1,521 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான பயிற்சி முடிந்தவுடன் ஒரு ஆசிரியருக்கு 15 மாணவிகள் என்று நியமிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும். இது ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழன் அன்று மாலை 3 மணியளவில் பயிற்சி கையேட்டைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மேலும் ஒவ்வொரு மாதமும் பயிற்சி கையேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யுனிசெப் துணையுடன் தயார் செய்து ஆசிரியர்களுக்கும். மாணவிகளுக்கும் பயிற்சி கொடுப்பார்கள். இதன் மூலம் கரூர் மாவட்டம் குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக திகழ்வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கு த.பிரபுசங்கர் மாவட்ட கலெக்டர் அவர்கள் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற மேலும் பல கரூர் மாவட்டச் செய்திகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக்  பக்கத்தை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்