சென்னை காவேரி மருத்துவமனையில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் பூரண குணமடைய வேண்டி, கரூரில் திமுகவினர் மொட்டையடித்து பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கரூரில் உள்ள தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திமுகவினர் 10 பேர் மொட்டை அடித்து வேண்டுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, கரூர் தெற்கு மாநகர பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், 41வது வார்டு திமுக செயலாளர் விஸ்வா ஏற்பாட்டில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கரூரில் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவரும் நிலையில், திமுகவினர் மொட்டை அடித்து, அன்னதானம் வழங்கி அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக வேண்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…