Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு..Representative Image.

கரூர் மாவட்டம் மயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவிகளை ஆற்றிற்கு அழைத்து சென்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனையார் பொறியில் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று உடற்கல்வி ஆசிரியருடன் சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு..Representative Image

போட்டியில் பங்கேற்றுவிட்டு, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு மாணவி மட்டும் ஆழம் அதிகமாக இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது, அந்த மாணவிக்கு நீச்சலும் தெரியாமல் இருந்துள்ளது, உடனே எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். 

அவரை காப்பாற்ற மூன்று மாணவிகள் சென்றுள்ளனர், அப்போது நீரின் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல், 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2  லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில், தலைமை ஆசிரியர் பொட்டுமணி விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தற்காலிமாக பணியிட நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்