Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேலம் அருகே காவல்நிலைய வளாகத்தில் மோதல் - 3பேர் கைது..!

Baskaran Updated:
சேலம் அருகே காவல்நிலைய வளாகத்தில் மோதல் - 3பேர் கைது..!Representative Image.

சேலம்: ஆட்டையாம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்  ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (29) என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18ஆம் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகனான பெயிண்டர் நவீன்குமார் (27) என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது திடீரென நவீன்குமார் நண்பர்களுக்கும், சக்திவேல் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நவீன் குமார் கோஷ்டியினர், சக்திவேல் கோஷ்டியினரை சிறிது தூரம் துரத்தி சென்று தாக்கினர். அப்போது சக்திவேல் வயிற்றில், குளிர்பான பாட்டிலை உடைத்து நவீன்குமார் குத்தினார்.

இதில் காயமடைந்த சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்க சென்றனர். இந்த நிலையில், நவீன்குமார் தரப்பினரும் அங்கு வந்தனர். அப்போது, தங்களை தாக்க வருவதாக நினைத்து, நவீன்குமார் தரப்பினர் சக்திவேல் தரப்பினரை தாக்கினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காவல்நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதை பார்த்த போலீசார் இரு தரப்பையும் விலக்கிவிட்டனர்.

ஆனாலும் அவர்கள் மாறி மாறி தாக்கினர். இதில் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். போலீசாரும் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினர். இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக, மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் நவீன்குமார், சத்யராஜ் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது கெட்ட வார்த்தையால் திட்டுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை பீதி அடைய செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்