Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேலத்தில் பேருந்து ஏறி மாணவன் உயிரிழப்பு - பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு..!

Baskaran Updated:
சேலத்தில் பேருந்து ஏறி மாணவன் உயிரிழப்பு - பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு..!Representative Image.

சேலம்: சேலத்தில் பள்ளி மாணவன் மீது அரசு பேருந்து ஏறி உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் கவேஷ்(12). அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை சாலையோரம் குவிக்கப்பட்டு இருந்தது.

அதன் மீது ஏறி சிறுவன் நடந்தபோது  தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சிறுவன் தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

அதில், இந்த விபத்திற்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் எடுக்கப்பட்ட மண் மற்றும் கற்கள் சாலை ஓரத்திலேயே குவிக்கப்பட்டிருந்தது. அரசின் அஜாக்கிரகையால் தனது மகன் உயிரிழந்ததாக கூறி வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் இருக்க அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பள்ளி முன்பும், பேருந்து நிறுத்தத்தின் முன்பும், சாலை பாதுகாப்பு காவலர்கள் அனைத்து நாட்களும் காவலுக்கு இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனது குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்