சத்தியமங்கலம் அருகே உள்ள டி.என் பாளையம் பெட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு மேல் தெரு நாய் ஒன்று சென்றுள்ளது. அங்கிருந்து 2வது மாடிக்கு சென்றபின் அருகில் இருந்த சிலாப்பில் இறங்கியுள்ளது, அதன் பின்னர் மீண்டும் மாடிக்கு எற முடியாமல், கீழேயும் இறங்க முடியாமல் தவித்துள்ளது.
மேலும் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் நடந்தபடி முனங்க தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாய் குரைக்க தொடங்கியது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜன்னல் சிலாப்பில் தவித்த நாயை மீட்க முயன்றனர்.
ஆனால் அதனை மீட்க முடியவில்லை, எனவே கோபி தீதனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு விரைந்து வந்த அவர்கள் நாயை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அந்த நாய் அங்கிருந்து ஓடியது, இதனால் அங்கி சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…