Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெலிவரி பாயா இல்ல டெர்ரர் பாயா.. சென்னையில் ஸ்விக்கிக்கு தடை?

Sekar July 06, 2022 & 12:43 [IST]
டெலிவரி பாயா இல்ல டெர்ரர் பாயா.. சென்னையில் ஸ்விக்கிக்கு தடை?Representative Image.

சென்னை அருகே உள்ள பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் உணவு டெலிவரி செய்ய சென்றபோது நடந்த வாக்குவாதத்தில் இதர டெலிவரி பாய்களை வரவைத்து அடிதடியில் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாக்கத்தில் 503 குடியிருப்புகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு உணவு டெலிவரி செய்ய நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஸ்விக்கி டெலிவரி பாய் சரத்குமார் சென்றுள்ளார். லிப்ட் மூலம் அவர் மாடி ஏறியபோது லிப்ட் வேலை செய்யவில்லை.

இதையடுத்து அந்த உணவு டெலிவரி பாய் எமெர்ஜென்சி பட்டனை அலுத்தியுள்ளார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியான ஒடிசாவைச் சேர்ந்த 33 வயதான பிரதீப்குமார் ராவத் என்பவர் வந்து லிப்டை திறந்துவிட்டுள்ளார்.

ஆனால் காவலாளி மெதுவாக வந்து திறந்துவிட்டதாகக் கூறி ஸ்விக்கி டெலிவரி பாய் காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சரி கோபத்தில் கத்துகிறார் என காவலாளியும் அசால்ட்டாக இருக்க அங்கிருந்து கிளம்பிய டெலிவரி பாய் சரத்குமார் தனது நண்பர்கள் மூன்று பேருடன் திரும்பி வந்து காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இவை அனைத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பாவி வருகிறது. இதையடுத்து பெரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்விக்கி டெலிவரி பாய் காவலாளியை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் வைரலான நிலையில், இன்று முழுவதும் அந்த குடியிருப்பு பகுதியில் ஸ்விக்கி பார்சல் டெலிவரி செய்ய குடியிருப்பு நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்