Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேயர் பிரியாவுக்கு எதிராக.. ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!! காரணம் என்ன?

Sekar June 29, 2022 & 15:55 [IST]
மேயர் பிரியாவுக்கு எதிராக.. ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!! காரணம் என்ன?Representative Image.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பேசவும் கேள்வி கேட்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால், ஆளும் கட்சி கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக கொதிப்பில் உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நேற்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 17 பேருக்கு மட்டுமே கேள்வி கேட்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் எந்தவித விவாதமும் இன்றி 100 தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள குறைகள் குறித்து பேசுவதற்கான பூஜ்ஜிய நேரமும் ரத்து செய்யப்பட்டதால் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சி கவுன்சிலர்களும் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் தனசேகர், சீனியர் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை, பூஜ்ய நேரம் ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது, கவுன்சில் கூட்டத்தை நாள் முழுவதும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற திமுக கவுன்சிலர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது.

எனினும் அப்போது பேசிய மேயர் பிரியா, கடந்த கவுன்சில் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்களை தவிர்த்து இதர உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, யாரையும் தவிர்ப்பது நோக்கம் இல்லை என்று விளக்கமளித்தார். பிறகு பேசிய ஆளும் கட்சி கவுன்சிலர்களின் தலைவர் ராமலிங்கம், மேயர்,துணை மேயர் மற்றும் கமிஷனர் உள்ளிட்ட அனைத்து தரப்பும் கூடி ஆலோசித்து பூஜ்ய நேரத்தை தவிர்த்து கொரோனா காரணமாக கூட்டத்தை விரைவாக முடிக்க முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனினும் இதனால் திருப்தியடையாத ஆளும்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கிடையே, கொரோனா பரவலை காரணம் காட்டி, ஒன்றரை மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கூட்டத்தில், தொற்று எளிதாக பரவும் ஏசி அறையில், சமூக இடைவெளியின்றி, மாஸ்க் அணியாமலும் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்