Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த நேரத்தில் கடற்கரைக்கு சென்றால் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை! 

KANIMOZHI Updated:
இந்த நேரத்தில் கடற்கரைக்கு சென்றால் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை! Representative Image.

டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்குச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர கமிஷனர் எச்சரித்துள்ளார். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில்  நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா, மயிலாப்பூர் துணை கமிஷனர்கள் திஷா மிட்டல், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் படி, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

“2023 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற் பகுதிக்கு வரவேண்டாம். பாதுகாப்பு கருதி எடுத்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்