Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மழையால் மந்தமான மழைநீர் வடிகால் பணி; சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

KANIMOZHI Updated:
மழையால் மந்தமான மழைநீர் வடிகால் பணி; சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!Representative Image.

பருவமழை காரணமாக முடிக்க இயலவில்லை என்ற காரணத்திற்காக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மார்ச் வரை சென்னை மாநகராட்சி கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் மற்றும் சிங்கார சென்னை நிதியில் குளங்கள் சீரமைக்கும் திட்டத்தில் 5 சிப்பங்கள் உள்ளிட்ட பணிகளை வடகிழக்கு பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை இடம் செய்யும் பணிகள் தாமதம் ஆகிய காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கி சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்