Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'2047ல் இந்தியா ஒரு பார்வை'.. கடிதம் எழுதுங்க.. ரூ.50 ஆயிரம் பரிசை வெல்லுங்க...

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 12:00 [IST]
'2047ல் இந்தியா ஒரு பார்வை'.. கடிதம் எழுதுங்க.. ரூ.50 ஆயிரம் பரிசை வெல்லுங்க...Representative Image.

ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கோபாலன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது. இதில், '2047-ல் இந்தியா ஒரு பார்வை' (vision for india 2047 letter) என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு (இன்லாண்ட் லெட்டர்), அஞ்சல் உறை பிரிவிலும் (என்வலப் லெட்டர்), இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. 

விதிமுறை:

நான்கு பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வலப் லெட்டர் பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை பேப்பரில், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதோபோல், இன்லாண்ட் லெட்டர் பிரிவில், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.

கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டியாளர்கள் தாங்கள் எழுதும் கடிதத்தில் ஜனவரி 1,2022 ஆம் தேதியின்படி 18 வயதுக்கு கீழ் உடையவர்கள், 18 வயதுக்கு மேல் உடையவர்கள் என சான்றிதழையும் இனைத்து அனுப்ப வேண்டும். 

எழுதப்பட்ட கடிதத்தின் மேல் 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி 2022-23 என குறிப்பிட்டு, 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002' என்ற முகவரிக்கு, அருகில் இருக்கும் தபால் அலுவலகங்களில் கொடுக்கலாம். 

பரிசு:

மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு,

முதல் பரிசு - ரூ.25,000

இரண்டாம் பரிசு - ரூ.10,000

மூன்றாம் பரிசு - ரூ.5,000

தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு,

முதல் பரிசு - ரூ.50,000

இரண்டாம் பரிசு - ரூ.25,000

மூன்றாம் பரிசு - ரூ.10,000

முக்கிய தேதிகள்:

கடிதம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: அக்டோபர் 31, 2022.

வெற்றியாளர் அறிவிப்பு தேதி: டிசம்பர் 25,2022. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்