Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode News Tamil: கால்நடைகளும் தீ மிதிக்கும் அதிசய கோவில் திருவிழா! 

Nandhinipriya Ganeshan March 15, 2022 & 13:00 [IST]
Erode News Tamil: கால்நடைகளும் தீ மிதிக்கும் அதிசய கோவில் திருவிழா! Representative Image.

Erode News Tamil: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மிகவும் பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் (Sathyamangalam Bannari Amman Temple) இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குண்டம் விழா நடப்பாண்டு நடக்கிறது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8 ஆம் தேதி காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மன் சப்பர வீதி உலா பண்ணாரியை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் கோவிலில் குண்டம் விழா வெகு விமரிசையாக் நடக்கும்.

அந்த வகையில் வருகிற 22 ஆம் தேதி மாபெரும் விழா நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் (erode bannari amman temple) விழாவில் தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் மட்டுமின்றி கர்நாடகா பக்தர்களும் தீ மிதிப்பார்கள். இதற்காக பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே இங்கு வந்து தங்கி இருந்து தீ மிதிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், ஏராளமான கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

9 ஆம் தேதி கோவிலிலிருந்து பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா புறப்பட்டு இன்று கோட்டுவீராம்பாளையம் தொடங்கி பசுவாபாளையம், புதுவடவள்ளி, புதுபீர்கடவு, ராஜன்நகர் கிராமங்களில் வீதியுலா முடிந்து கோயிலை சென்றடைகிறது. இந்நிலையில், குண்டம் விழாவில் அசம்பாவிதங்களை தடுக்கவும், வனத்தை ஒட்டிய இடத்தில் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

அதோடு, பக்தர்கள் வரிசையில் நின்று குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் வெயில் கொளுத்தி வருகிறது. எனவே வெயிலில் பக்தர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக மேற்கூரையும் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதுபோன்ற ஈரோடு மாவட்ட செய்திகளை (Erode News Live) உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Search Around Web என்ற Tamil வலைத்தளப் பக்கத்தைத் தொடர்ந்திருங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்