மதுரையில் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களுக்கு போலி ரத்த சான்றிதழை வழங்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பிரபா வசந்தகுமாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள பைபாஸ் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஓட்டுநர் உரிமம், லேனர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கினறனர். இதில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பபிப்பவர்கள் ரத்த வகை குறிப்பிட வேண்டும். இதற்காக ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்தில் ஆய்வு செய்து ரத்த வகைக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்கள் வழங்கிய ரத்த சான்றிதழில் போலி ரத்த சான்றிதழ் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேல் அது குறித்து ஆய்வு செய்தார். அதில் நிறைய போலி ரத்த சான்றிதழ் இருந்ததால் அது குறித்து விசாரணை செய்த போது வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே இயங்கி வரும் தீபக் ஜெராக்ஸ் கடையிலிருந்து ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்யாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் ரத்த குரூப் போட்டு ரத்த சான்றிதழ்கள் வழங்கி வந்தது தெரியவந்தது.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேல் உடனடியாக எஸ்.எஸ்.காரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தீபக் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் பெண் பிரபா வசந்தகுமாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…