Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,794.93
-192.10sensex(-0.26%)
நிஃப்டி22,127.95
-72.60sensex(-0.33%)
USD
81.57
Exclusive

மதுரையில் வீடுகளில் கிளி வளர்க்க தடை.. மீறினால் வழக்குப் பாயும்..! - வனத்துறை எச்சரிக்கை

Selvarani Updated:
மதுரையில் வீடுகளில் கிளி வளர்க்க தடை.. மீறினால் வழக்குப் பாயும்..! - வனத்துறை எச்சரிக்கை  Representative Image.

மதுரையில் சட்டவிரோதமாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தசட்டத்தின்படி, கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி வீடுகளில் கிளிகள் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் பகுதியில் பல வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வளர்ப்பதாகவும், அவற்றின் இறக்கைகளை வெட்டி, கிளிகளை துன்புறுத்தி வருவதாகவும் வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து, செல்லூர் பகுதியில், ஒரேநாளில் பத்துக்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். சட்டத்தை மீறி வீடுகளில் கிளிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். கிளிகள் வளர்ப்பவர்கள் தாங்களாகவே ஜூலை 17ம் தேதிக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்தனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்