Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Whatsapp-இல் வந்த போலி லிங்க்.. ரூ.8 லட்சம் ஸ்வாக...!

Bala July 01, 2022 & 13:00 [IST]
Whatsapp-இல் வந்த போலி லிங்க்..  ரூ.8 லட்சம் ஸ்வாக...!Representative Image.

மின்கட்டணம் செலுத்துமாறு வந்த வாட்ஸ் அப் லிங்கை தொட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 8 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 83 வயதான இவர், அப்பகுதியில் உள்ள ஸ்ரீவத்ஸா ரெசிடென்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ் அப் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் இன்னும் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும், இன்று இரவுக்குள் கட்டணம் செலுத்தாவிடில் உங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், அதனை தவிர்க்க இந்த லிங்கில் சென்று உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி , லிங்கை தொட்டு உள்ளே சென்ற அவர், வங்கி விபரங்களை பதிவிட்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் ஏடிஎம் சென்று பார்த்த போது வங்கிக்கணக்கில் ரூ.8 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்சியடைந்த அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி போலியான லிங்கை நம்பி, வங்கி விபரங்களையோ, பிற விபரங்களையோ பதிவிட வேண்டாம் என சைபர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்