Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வரலாறு காணாத அளவில் விலை உயர்வு… கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி…!

Gowthami Subramani Updated:
வரலாறு காணாத அளவில் விலை உயர்வு… கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி…!Representative Image.

சென்னையில் கோயம்பேடு, உணவு தானிய மார்க்கெட்டில் திடீரென மளிகை பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஊட்டி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு மளிகைப் பொருள்கள் தினந்தோறும் குவிகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வின் எதிரொலியாக, மளிகைப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சில மளிகைப் பொருள்களும் அதன் உயர்த்தப்பட்ட விலையையும் இங்கு காணலாம்.

மளிகைப் பொருள்கள்

உயர்த்தப்பட்ட விலை

1 கிலோ மிளகாய்

ரூ.350

தனியா

ரூ.250

மிளகு

ரூ.550

ஏலக்காய்

ரூ.1200

லவங்கம்

ரூ.750

அண்ணாச்சிப் பூ

ரூ.900

முந்திரி

ரூ.650

பட்டை

ரூ.300

துவரம்பருப்பு

ரூ.125

சிறுபருப்பு

ரூ.100

கடலை பருப்பு

ரூ.70

உளுத்தம் பருப்பு

ரூ.120

கடுகு

ரூ.80

சீரகம்

ரூ.280

சோம்பு

ரூ.150

வெந்தயம்

ரூ.100

திராட்சை

ரூ.250

நெய்

ரூ.230

டால்டா

ரூ.120

 

இந்த விலையேற்றத்தைக் குறித்து, கோயம்பேடு மார்க்கெட்டின் உணவு தானிய வியாபாரி ஒருவர் கூறுகையில், “கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் கடந்த இரண்டு மாதமாகவே, மளிகைப் பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாகும்” என்று கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்