Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துப்பாக்கியால் சுட்டு போட்டியை தொடக்கி வைத்த ஐஜி சைலேந்திரபாபு!

Chandrasekaran Updated:
துப்பாக்கியால் சுட்டு போட்டியை தொடக்கி வைத்த ஐஜி சைலேந்திரபாபு! Representative Image.

தமிழக அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியை, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் 2023 ம் வருடத்திற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் உள்ள துப்பாக்கி சுடுதளத்தில் துவங்கியது.

இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல்/ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவதாக இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் மொத்தம் 11 அணிகளில் இருந்து சுமார் 242 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் தமிழகம் முழுவதும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட காவல் ஆணையரகம் மற்றும் பெண்கள் அணி என மொத்தம் 11-அணிகள் கலந்து கொண்டனர். இதனை தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஏடிஜிபி ஜெயராம், காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்