Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மருத்துவ மாணவர்களுக்கு நீட் அவசியம் - சாதனை மாணவர் பிரபஞ்சன் கருத்து

Baskaran Updated:
மருத்துவ மாணவர்களுக்கு நீட் அவசியம் - சாதனை மாணவர் பிரபஞ்சன் கருத்து Representative Image.

சென்னை: மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் என இந்தியாவிலேயே முதல் இடம்பெற்ற மாணவன் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார் மாணவன் பிரபஞ்சன். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர். இவரது தந்தை ஜெகதீஷ், விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது தாயும் ஆசிரியர்.

இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான பா.சிதம்பரத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அவரது பெற்றோரும் உடனிருந்தனர். மூத்த தலைவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். என்னை பொறுத்தவரை மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியுமாகும் எனவும் பிரபஞ்சன் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்