Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! அதுவும் 40,000 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் அறிவிப்பு… எங்கு எப்போது தெரியுமா..?

Gowthami Subramani Updated:
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! அதுவும் 40,000 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் அறிவிப்பு… எங்கு எப்போது தெரியுமா..?Representative Image.

தமிழக அரசு வேலைவாய்ப்பில்லாத மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தி 40,000 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தக் கூடிய இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 26, 2022 ஆம் நாள் நடைபெற உள்ளது.

பல்வேறு துறைகள்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வங்கி சேவைகள் காப்பீடு, ஜவுளி, கட்டுமானம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் வேலை அளிக்க உள்ளன. இதன் மூலம், 40,000-ற்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்

அரசு நடத்தும் இந்த மாபெரும் முகாம் ஆனது, நவம்பர் 26 ஆம் நாள், சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

தகுதி

இந்த முகாமில், ஐஐடி, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம்.

பதிவு செய்ய

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலையளிப்பவர்களும், வேலை பெற நினைப்பவர்களும் கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://www.tnprivatejobs.tn.gov.in/

முகாம் குறித்த மேலும் சில விவரங்களுக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி: jobfairmccsalem@gmail.com

தொலைபேசி எண்: 0427-2401750

மேலே கொடுக்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி, வேலை பெற நினைப்பவர்கள் முகாம் குறித்த மற்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு வழிநடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புப் பெறலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்