Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ரூ.20 கோடி வேணும்... கனியாமூர் பள்ளிக்கு ஆதரவாக களமிறங்கிய தனியார் பள்ளி கூட்டமைப்பு! 

Kanimozhi Updated:
ரூ.20 கோடி வேணும்... கனியாமூர் பள்ளிக்கு ஆதரவாக களமிறங்கிய தனியார் பள்ளி கூட்டமைப்பு! Representative Image.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியை திறக்க அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம்,தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தனியார் பள்ளி கூட்டமைப்பின் செயலாளர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஜூலை 17ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டதோடு, பொருட்களும் சூறையாடப்பட்டன. 

இதனையடுத்து 145 நாட்களுக்குப் பிறகு, பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தனியார் பள்ளி கூட்டமைப்பின் செயலாளர் நந்தக்குமார், “கலவரத்தின் போது பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை நண்பர்களின் 60 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு எரிந்துள்ளதாகவும், பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 43 பள்ளி பேருந்துகள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் என அனைத்தும் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இதன் மூலமாக பள்ளிக்கு 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, தற்போது பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள    10 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பள்ளிகள் நேரடியாக திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவதற்கு அனுமதி வழங்குவார்கள் என நம்புகிறோம் எனவும் தெரிவித்தார். 

மாணவர்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டேஷனரி பொருட்கள், லைப்ரரியில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் புத்தகம் என அனைத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் நிலைகுலைந்து போய் உள்ளதாகவும் மீதமுள்ள 20 கோடி ரூபாயை தமிழக அரசு நஷ்ட ஈடாக தர வேண்டும் என தனியார் பள்ளிகளின் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்