Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Madurai Latest News : மதுரையில் கிடாய் முட்டு சண்டை..? கிராம மக்கள் மகிழ்ச்சி..!

Muthu Kumar April 28, 2022 & 06:45 [IST]
Madurai Latest News : மதுரையில் கிடாய் முட்டு சண்டை..? கிராம மக்கள் மகிழ்ச்சி..!Representative Image.

Madurai Latest News : மதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடாய் முட்டு சண்டை.

 

கிடாய் முட்டு சண்டை 

மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடாய் முட்டு சண்டை நடபெறுவது வழக்கம்.

தடை

இந்த கிராமத்தில் கிடாய் முட்டு சண்டை கடந்த 20 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் பல்வேறு முயற்சி எடுத்தும் அனுமதி கிடைக்காததால் ஐகோர்ட்டு அனுமதியுடன் கட்டுப்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு நேற்று காலை கிடாய் முட்டு சண்டை நடந்தது. இதற்காக நேற்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன. 

நிகழ்ச்சியின் முக்கிய தலைவர்கள்

இந்த நிகழ்ச்சிக்கு கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமையில் முத்துப்பாண்டி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன்  தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி தலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஸ் ஆகியோர் கலந்து கொண்டு விழவை சிறப்பித்தனர்.

கிடாய்கள்

இந்த கிடாய் முட்டு சண்டையில் பல கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து கலந்து கொண்டனர். அதன்படி, கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் இருந்து 16 கிடாய் மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து 68 கிடாய்கள்  போட்டியில் கலந்து கொண்டன. கலந்துகொண்ட கிடாய்களுக்கு கமிட்டி சார்பாக பரிசு வழங்கப்பட்டது. 

பாதுகாப்பு

பல ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிடாய் முட்டு சண்டையில் பாதுகாப்புக்காக போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்