Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - கே.எஸ் அழகிரி

Baskaran Updated:
அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - கே.எஸ் அழகிரிRepresentative Image.

சென்னை: முதலமைச்சர் அனுப்பிய அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக் கொண்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் அனுப்பிய அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக் கொண்டால் தான் ஆச்சுரியப்பட வேண்டும்.

மத்திய மோடி அரசு என்ன சொல்லி அனுப்பி உள்ளதோ? ஆளுநர் அதை செய்து கொண்டு இருக்கிறார். அம்பை ஏய்தவர்களை தான் பேச வேண்டும். அம்பை பேசி பிரயஜோனம் இல்லை. கூட்டாட்சி முறையை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சருக்கு தனது அமைச்சரவை மாற்றி நியமிக்க உரிமை உண்டு.

மரபுக்காக தான் ஆளுநர் கையெழுத்து. இல்லை என்றால் அவர்களை முதலமைசாரே நியமித்து கொள்ளலாம். முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது. கவர்னர் ஒத்துழைக்கவில்லை என்றால் அரசும் ஒத்துழைக்காது. தமிழக காவல்துறையை கூட திரும்ப பெறலாம். சி.ஆர்.பி.எப். வைத்து கொள்ளலாம். தமிழக நிர்வாக .எஸ்.. அதிகாரிகளை திரும்ப பெறலாம். மத்திய அரசு அதிகாரிகளை தான் வைத்து கொள்ள முடியும்.

இது போன்ற சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்து உள்ளது. ஆளுனரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடந்து உள்ளது. தமிழகத்திற்கு கலாச்சாரம், பண்பாடு உள்ளது. அதை மீற கூடாது என நினைக்கிறோம். தொடர்ந்து செய்ய முடியாது. ஆளுநர் செயலை தமிழ் சமூகம் அனுமதிக்காது. தமிழகத்தில் ராகுலை 71 சதவீதமும் மோடியை 21 சதவீதமும் ஆதரிப்பதாக கருத்து கணிப்பு வந்து உள்ளது. மோடியின் வீழ்ச்சிக்கு ஆளுநர் ரவி, அண்ணாமலை தான் காரணம், இவர்கள் செய்த செயல்களால் மத்திய அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

முதலமைச்சர் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை சொல்ல என்ன அதிகாரம் இருக்கு. மோடி, ஆளுநர் கைது செய்யப்படுவார்கள் என நான் சொன்னால் அதில் பொருள் இருக்கா. பையத்திக்காரன் என நினைப்பார்கள். அண்ணாமலை பேசுவது சட்டப்படி குற்றம். வேறு மாநிலங்களில் வைத்து கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது செந்தில் பாலாஜி ஊழல் செய்தால் விசாரிக்கிறார் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்த மற்ற அமைச்சர்களை ஏன் விசாரிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தாக்கீது தந்தும் ஏன் ஆளுநர் அனுமதி தரவில்லை. நேர்மையாக செய்ய வேண்டும் என்றால் எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். அதிமுகவில் ராஜ மரியாதை தந்து திமுகவிற்கு வந்து விட்டதால் நடவடிக்கை எடுப்பது அரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்பது தானே.

உலகத்தில் மின்சார தடை ஏற்படாத நாடு இருக்கா. அமீத்ஷா வந்த போது மின்சாரம் கட் ஆகி இருக்கலாம். தமிழகத்தில் மலிவான அரசியலா நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்