Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பல வரலாற்று சிறப்புகளை கொண்டது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை - அமைச்சர் பெருமிதம்

Baskaran Updated:
பல வரலாற்று சிறப்புகளை கொண்டது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை - அமைச்சர் பெருமிதம்Representative Image.

சென்னை: இன்றைய இளைய சமுதாயத்திடம் பெரியவர்கள் அறிவுறுத்தல் பெற வேண்டிய நிலை உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பட்டமளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி, இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரிய அளவில் அறிவுறுத்தல் தேவையில்லை. அவர்களிடம் இருந்து பெரியவர்கள் தெரிந்துக்கொள்ளும் நிலை தான் உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்திய மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையாக இருந்தது. லண்டன் தொட்டி மருத்துவமனை என்பார்கள், லண்டன் தோட்டம் என்பதற்கு பதிலாக லண்டன் தொட்டி என்று கூறுவார்கள்.சையத்கான் பேட்டை சைதாபேட்டை என்று மாறியது. இது போல் நிறைய பெயர் மறுவியுள்ளது.
பனகல் அரசர் தான் மருத்துவமனைக்காக இடம் கொடுத்துள்ளார். பல வரலாற்று சிறப்புகளை கொண்டது கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை.

மருத்துவக்கல்விக்கு பெரிய உதவியாக இக்கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம்74 36அரசு 34தனியார் ஒரு .எஸ். மருத்துவக்கல்லூரியும் உள்ளது. ஒட்டுமொத்த இந்திய அளவில் 12-13% வரை மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிலுள்ளது. அதிக மருத்துவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். தொடர்ச்சியாக அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறோம்.

இப்போது பட்டம் பெறுபவர்கள் பேரிடர் காலத்தில் பெரிதும் உதவியவர்கள். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாகும். கொரோனா காலத்தில் பெரிய உதவியாக இம்மாணவர்கள் இருந்தார்கள் என உங்கள் கல்லூரி முதல்வர்களே சொல்லியுள்ளார்கள்.

சுமார் 9லட்சம் புற நோயாளிகள், 3லட்சம் உளநோயாளிகளை ஆண்டு ஒன்றுக்கு கையாளுகிறது. முதலில் மமோகிராம் பொதுமக்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தான் கிடைத்தது. ரூ.368.20கோடி ஜெய்கா நிதி உதவியுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.159கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் இக்கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அதன் பின் பழையான கட்டிடம் இடிக்கப்பட்டு 125கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டவுள்ளது. தொடர்ச்சியாக பல திட்டங்களை முதல்வர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். என் வீட்டிலும் இரு மருத்துவர்கள் உள்ளனர் மகனும் , மருமகளும் மருத்துவர்கள். இதோடு நிற்காமல் முதுகலை படிப்பிலும் சேர்ந்து படிக்கவேண்டும்.

8-க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 2 பாடப்பிரிவுகளைக்கொண்டு வந்துள்ளோம். இளங்கலை படித்து முடித்துள்ள நீங்கள் மீண்டும் முதுகலை பயில இங்கு வரவேண்டும் என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்