Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேலத்தில் சுய தொழில் தொடங்குவதற்கு வழங்கும் கடனுதவி..! யார் யாருக்குத் தெரியுமா....?

Gowthami Subramani [IST]
சேலத்தில் சுய தொழில் தொடங்குவதற்கு வழங்கும் கடனுதவி..! யார் யாருக்குத் தெரியுமா....?Representative Image.

தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை மக்களின் நலனுக்காக வழிவகுத்து வருகிறது. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில், புதிதாக தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த மகத்தான திடத்தில், மாற்றுத் திறனாளிகள், அறிவுசார் இயலாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குக் கடனுதவி அளிக்க உள்ளது.

அதன் படி, இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெறும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான கடனுதவியை வங்கிகள் மூலம் பெற்றுத் தர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை ஆகும். சிறப்புப் பிரிவினருக்கான வயது வரம்பு 45 ஆகும்.

குறிப்பாக, விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்ச தொகையாக ரூ.5 லட்சம் கொண்டிருக்கலாம். மேலும், மேலே கூறப்பட்ட பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 55 ஆக உயர்த்தியுள்ளது. இதற்குக் கல்வித் தகுதி தேவையில்லை என அரசாணை வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத் திறனாளிகள், அறிவுசார் இயலாமை போன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் புதிய சலுகைகளுடன் கூடிய இத்திட்டத்தின் கீழ், மானியத்துடன் கடன் தொகை பெற்று சுயமாக தொழில் செய்யலாம். இது குறித்த விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள சேலம் மாவட்டத்தில் ஐந்து சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் அல்லது 0427-2448505, 2447878 போன்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Handicapped Loan Scheme in Tamilnadu | Subsidy Loan for physically Handicapped | SBI Home Loan for Handicapped Person | Financial Assistance for disabled Person in India | Home Loan Subsidy for physically Handicapped | Home Loan for disabled Persons in India | MSME Loan for Handicapped | Business Loan for Handicapped Person | Self Employment for Disabled Person | Loan for Differently Abled Persons | Employment for Differently Abled | Self Employment Schemes for Physically Handicapped | Personal Loan for Disabled Person | Self Employment Loan for ladies


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்