Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எதுக்கு தெரியுமா?

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 13:57 [IST]
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எதுக்கு தெரியுமா?Representative Image.

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் பெயர்பெற்றவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இதனையடுத்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். 

அந்தவகையில், நாளை மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள், அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

அதையடுத்து சிவகங்கை ,தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருபுவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர் ,சிங்கம்புணரி தவிர்த்து ஆறு தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்