Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆதீன மடாதிபதியாக இருப்பது முள்மேல் இருப்பது போலிருக்கிறது - மதுரை ஆதினம்

Baskaran Updated:
ஆதீன மடாதிபதியாக இருப்பது முள்மேல் இருப்பது போலிருக்கிறது - மதுரை ஆதினம்Representative Image.

மதுரை: முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக வரலாம். அவருடைய தமிழ் உணர்வு அதற்கு பயன்படும். அவர் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததை பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் தான் செங்கோல் கொடுத்தேன்.

தமிழர் தான் பிரதமராக வர வேண்டும். தமிழ்நாட்டையும் தமிழரே ஆள வேண்டும். அது போல இந்தியாவையும் தமிழர்கள் தாராளமாக ஆளலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஆதரிப்போம். நான் எந்த அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து சொல்வேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ரசிகர்கள் என்னை பகைப்பார்கள்.

பிரதமர் மோடி திருக்குறள் தேவராத்தை விரும்பி கேட்பவர். உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையை சொல்கிறார். மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் கொண்டு வருவார்கள்.

ஆதீன மடாதிபதியாக இருப்பது முள் மேல் இருப்பது போலிருக்கிறது. ஏன் வந்தோம் என தோன்றுகிறது. எனக்கு பிடிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே பல்வேறு மடங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்