Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Virudhunagar District News : கலப்பட பதனீர் விற்பனை..? அதிகாரிகள் அதிரடி...!

Muthu Kumar May 24, 2022 & 16:33 [IST]
Virudhunagar District News :  கலப்பட பதனீர் விற்பனை..? அதிகாரிகள் அதிரடி...!Representative Image.

Virudhunagar District News :  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருநெல்வேலி மாவட்டத்தின் கிராம பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பதனீர் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பதனீரில் கலப்படம் இருப்பதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து மற்றும் சில அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

ஆய்வு

இதனைதொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிவகாசி நகர் முழுவதும் உள்ள 7 கடைகளில் விற்பனை செய்யும் பதனீரை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சர்க்கரை, சுண்ணாம்புகள் வைத்து தேவைக்கேற்ப பதனீர் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

கலப்பட பதனீர்

இந்நிலையில், கலப்பட பதனீர் சுமார் 350 லிட்டரை கைபற்றிய அதிகாரிகள் அதை அழித்தனர். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா முத்து செய்தியாளர்களை சந்தித்த போது, “சிவகாசி பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து பதனீர் கொண்டு வந்து சிலர் விற்பனை செய்கிறார்கள். தரமான பதனீர் 3 மணி நேரத்திற்கு மேல் தாங்காது. ஆனால் தற்போது சிவகாசியில் காலையில் இருந்து மாலை வரை பதனீர் விற்பனை செய்யப்படுகிறது. 

விழிப்புணர்வு

அதனால் அந்த பதனீரில் அதிக அளவு கலப்படம் செய்கின்றனர். அதில் முக்கியமாக சர்க்கரை மற்றும் சுண்ணாம்புகளை இருப்பு வைத்து தேவைக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து பதனீர் என்று விற்பனை செய்கிறனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பதனீர் குறித்து சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்