Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்படி மெசேஜ் வருதா..? நம்பிடாதீங்க.. நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை!!

Sekar July 28, 2022 & 14:42 [IST]
இப்படி மெசேஜ் வருதா..? நம்பிடாதீங்க.. நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை!!Representative Image.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் கறக்கும் மோசடி அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை சம்பளத்ததுடன் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வங்கிகளில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் வாங்கித் தரப்படும் என்றும் இதற்காக செக்யூரிட்டி டெப்பாசிட்டாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்க வேண்டும் என்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கூட்டுறவுத்துறை மூலம் அப்படி எந்த பணியிடங்களும் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. 

இது நாமக்கல் கலெக்டர் ஷ்ரேயா சிங் கவனத்திற்கு சென்ற நிலையில், பொதுமக்கள் இந்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். 

மேலும் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவோர் மீது குற்றவியியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்