Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோட்டில் சிறப்பு வாய்ந்த பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்! சக்தி வாய்ந்த காளி!

UDHAYA KUMAR September 16, 2022 & 14:37 [IST]
ஈரோட்டில் சிறப்பு வாய்ந்த பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்!  சக்தி வாய்ந்த காளி!Representative Image.

ஈரோடு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இங்குள்ள சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இப்போது நாம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த காளி கோவில் பற்றி தெரிந்துகொள்ள இருக்கிறோம். 

எங்கே அமைந்துள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொண்டத்து காளியம்மன் கோவில். 

பழமை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட கோவில் இது. கிட்டத்தட்ட 1000 வருட பழமையான கோவில்களில் ஒன்று என பலராலும் பாராட்டப்படுகிறது. பல்வேறு காலக்கட்டத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. புனரமைக்கப்பட்டது. கடைசியாக 1950ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டது. பின்னர் அவ்வப்போது சில சில புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. 

கடையேழு வள்ளல் பாரி

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வ கோவில் இதுதான் என நம்பப்படுகிறது.  வரலாற்றில் அழகாபுரி எனப் போற்றப்படும் ஊர் இது. 

வரலாறு

கோபிச்செட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் கோபிச்செட்டிப்பிள்ளான் என்ற வள்ளலின் பெயராலே இப்படி அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் கொண்டாடத் தவறிய வள்ளல் இந்த கோபி.  தன்னிடம் கொடுக்க பொருள் இல்லை என்கிற சூழ்நிலையில் அவமானத்தால் உயிர்த்துறக்க முயன்றுள்ளதாக வரலாறு. அதிலும் அவர் காட்டில் புலி புதருக்குள் சென்று உயிர் விட நினைக்கும்போது அங்கு கொள்ளையடித்த நகைகளைப் பங்கு போட்டுக்கொண்டிருந்த கொள்ளையர்கள் இவரை புலி என நினைத்து பதறியடித்து ஓடிய நிலையில், அந்த பொருட்களை வறியவர்களுக்கு வாரி வழங்கியவர். 

கோவில் தெய்வங்கள்

காளியம்மனும் உடன் விநாயகரும் அருள்தரும் தலம் இது. மகா முனியாப்பன், கன்னிமார், பொன் காளியம்மன் உள்ளிட்ட இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள். 

ராஜ கோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. பிரதான கோபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. 

பலன்கள்

பல வருடங்களாக குழந்தை பலன் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. 

பயத்திலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் மக்களை பாதுகாக்கின்றன இந்த தெய்வங்கள். இதற்காக கோவிலில் தாயத்துகளும் வழங்கப்படுகின்றன. 

நடை திறப்பு நேரம்

காலை 6 மணிக்கு தினமும் நடை திறக்கும். 

மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டு பின் 4 மணிக்கு திறக்கப்படும். 

இரவு 8 மணி வரை இந்த கோவில் நடை திறந்திருக்கும். 

காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

விழாக்கள்

தேர்த்திருவிழா வருடாவருடம் மார்கழி மாதத்தில் நடைபெறும். 

கோவில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்