Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

theni rain: கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி...அணைகளில் நீர்மட்டம் உயர்வு.!!

madhankumar April 13, 2022 & 13:35 [IST]
theni rain: கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி...அணைகளில் நீர்மட்டம் உயர்வு.!!Representative Image.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அது குறித்த விவரம் பிவருமாறு:
 

மழை பதிவு விவரம் :-

கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மலை பெய்து வருகிறது . அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்து வந்தது . 

இதனடிப்படையில் ஆண்டிபட்டியில் 31.8 மில்லி மீட்டர் , அரண்மனை புதூர் பகுதியில் 14.4 மில்லி மீட்டர் , போடி நாயக்கனூர் பகுதியில் 11.4 மில்லி மீட்டர் , கூடலூரில் 35.7 மில்லி மீட்டர் , பெரியகுளத்தில் 55.0 மில்லி மீட்டர், வீரபாண்டி பகுதியில் 53.0 மில்லி மீட்டர் உத்தமபாளையம் பகுதியில் 11.4 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகியுள்ளது. 


மேலும், மஞ்சளாறு அணை பகுதியில் 53.0 மில்லி மீட்டர், பெரியாறு அணை பகுதியில் 9.2 மில்லிமீட்டர் , சோத்துப்பாறையில் 19.0 மில்லிமீட்டர், வைகை அணை பகுதியில் 43.4 மில்லிமீட்டர், தேக்கடி பகுதியில் 21.0 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்மட்ட விவரம் :-


71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 728 கன அடியாக உள்ளது. 822 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மஞ்சளாறு அணையில் தற்போது நீர்மட்டம் 34.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து 12 கன அடியாக உள்ளது .அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.82 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 12 கன அடி. 03 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55 அடி உயரம் கொண்ட சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 5 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.95 அடியாக உள்ளது. நீர்வரத்து 1225 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்