Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் மீட்பு..!

Baskaran Updated:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் மீட்பு..!Representative Image.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் பணிக்கு வந்த போது அலுவலக பின்புறத்தில் பாம்புகள் சென்றது தெரியவந்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் ஜேசிபி வாகனம் மூலம் புதர்கள் இன்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்