Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வில் தோல்வி.. மாணவி தூக்கிட்டு தற்கொலை.. இதற்கு முடிவு தான் என்ன?

Nandhinipriya Ganeshan September 08, 2022 & 10:48 [IST]
நீட் தேர்வில் தோல்வி.. மாணவி தூக்கிட்டு தற்கொலை.. இதற்கு முடிவு தான் என்ன?Representative Image.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த ஜூலை 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.

இதற்கான முடிவுகள் நேற்றிரவு (செப்.,7) வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா (19), நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார்.

மகளை மீட்ட பெற்றோர், கீழ்பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்