Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேனா சின்னம் வைக்க காசு இருக்கு; கரும்பு வாங்க காசியில்லையா? - கரு.நாகராஜ் ஆவேசம்!

KANIMOZHI Updated:
பேனா சின்னம் வைக்க காசு இருக்கு; கரும்பு வாங்க காசியில்லையா? - கரு.நாகராஜ் ஆவேசம்!Representative Image.

தமிழக அரசு பொங்கல் தொகுப்பிற்காக கரும்பு தேங்காய் வெள்ளம் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

கருணாநிதிக்கு பேனா வைக்க செலவு செய்யும் பணத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியாதா? என பாஜகவின் விவசாய அணி சார்பில் கரு.நாகராஜன் தலைமையில் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் சென்னை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் இந்த ஆர்ப்பாட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.  இந்த ஆர்ப்பாட்டமானது தமிழக மக்களுக்கான ஆர்ப்பாட்டம். இது ஒரு கட்சிக்கான ஆர்ப்பாட்டம் கிடையாது  ஒவ்வொரு பொங்கலுக்கும்  செங்கரும்பு விற்பனை அதிகமாக நடக்கும் என்பதை நம்பித்தான் ஏழை விவசாயிகள் செங்கரும்பை பயிரிடுகின்றனர்.

கடந்த ஆண்டில் பொங்கல் பரிசு பொருட்களோடு கரும்பும் சேர்ந்திருந்ததால் இந்த ஆண்டும் ஏறக்குறைய 2 லட்சம் பரப்பளவில் கூடுதலாக விவசாயிகள் செங்கரும்பை பயிரிட்டனர்.

கடந்த முறை ( பொங்கல் தொகுப்பு பொருட்களில் திமுகவின் ஊழல்) அதனால் திமுகவின் பெயர் கெட்டுப் போய்விட்டது.. அவர்கள் கொடுத்த கரும்பு உள்ளிட்ட வெல்லம் போன்ற பொருட்கள் சரியானதாக இல்லை கடந்த ஆண்டை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லாததால் தற்போது 50 லட்சம் கரும்பு கொள்முதல் தேங்கியுள்ளது. 

தமிழக அரசு வெல்லத்தையும் வழங்கவில்லை.50 லட்சம் பயிரிட்ட கரும்புகள் தடை செய்யப்பட்டிருப்பது என்பது விவசாயிகளுக்கு செய்திருக்கும் துரோகம். தமிழகத்தில் உள்ள 46 லட்சம் விவசாயிகளுக்கு  ஆண்டுதோறும் 6000 ரூபாயை பிரதமர் மோடி கொடுக்கின்றார். அது மட்டுமில்லாது  ஏழை விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ திட்டமும் கொடுத்திருக்கின்றார்.

விவசாயிகளுக்கு இவ்வளவும் பிரதமர் மோடி கொடுக்கும்போது திமுக அரசால் ஒரு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு, வெல்லம் தேங்காய் கொடுக்க முடியாதா? அப்படி கொடுத்தால் அவர்களின் கஜானா காலியாகி விடுமா?கருணாநிதிக்கு பேனா வைக்க செலவு செய்யும் பணத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியாதா? பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் கரும்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெறுகிறது என்றார். 

பின்னர் இது குறித்தான மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவின் விவசாய அணி சார்பில் கரு.நாகராஜன் தலைமையில் கொடுக்கப்பட்டது.

முன்னதாகஇந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவின்  விவசாய அணியினர்  திமுகவுக்கு எதிராகவும், தமிழக அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் அண்ணாமலையிடம் கொடுத்துவிங்கள் எனவும் முழக்கமிட்டனர்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்