Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tirupur News : காங்கேயம் பேருந்து நிலையத்தில் போராட்டம் எதுக்குனு தெரியுமா..!

Manoj Krishnamoorthi September 20, 2022 & 10:05 [IST]
Tirupur News : காங்கேயம் பேருந்து நிலையத்தில் போராட்டம் எதுக்குனு தெரியுமா..!Representative Image.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா சேர்ந்த காங்கேயம்  பேருந்து நிலையத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.  இந்த கண்டன் ஆர்பாட்டம் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் எஸ். தங்கவேல் தலைமையில்  தற்போது தமிழக அரசால் உயர்ந்துள்ள மின்சார கட்டணத்தை கண்டித்து நடத்தியது.

மின் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு 2026-27 வரை அமலில் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்தது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு 10.9.2022 அமலுக்கு வந்ததது. 

ஆர்பாட்டத்தின் போது ஒன்றிய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மாநில அரசை நிர்பந்திப்பது, மாநில அரசு மக்களின் வாழ்வை பறிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்னும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாவும், மேலும் இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து  கோஷமிட்டனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்