Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode News Today: நாளைக்கு ஈரோட்டில் மட்டும் இத்தன பேரு TNPSC  குரூப் 2 தேர்வு எழுத உள்ளனர்...!! மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்....!!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 20:35 [IST]
Erode News Today: நாளைக்கு ஈரோட்டில் மட்டும் இத்தன பேரு TNPSC  குரூப் 2 தேர்வு எழுத உள்ளனர்...!! மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்....!!!Representative Image.

Erode News Today: தமிழகத்தில் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. எனவே, ஹால் டிக்கெட், அடையால அட்டை (ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு), கருப்பு மை பேனா, முக்கியமாக முகக்கவசம் போன்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பேனாக்களை எடுத்து செல்வது நல்லது. தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு தயார்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு மையத்தில் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது. எனவே அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள். தேர்வு நாள் காலையில் காலை உணவை எடுக்க மறந்துவிடாதீங்க.

நாளை குரூப் 2 தேர்வு எழுது தமிழக முழுவதும் ஆவலோடு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் 35,619 பேர் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக கல்லூரி, பள்ளிகளில் மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும், தேர்வு மையங்கள் உள்ள நகர், புறநகர் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடந்தது. எனவே, தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்