Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பொண்ணுங்க இனி பயமில்லாம பயணம் பண்ணலாம்.... உதயநிதி தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! 

KANIMOZHI Updated:
பொண்ணுங்க இனி பயமில்லாம பயணம் பண்ணலாம்.... உதயநிதி தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! Representative Image.

பெண்கள் ,குழந்தைகள்,மகளிருக்கு எதிரான  குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக நிர்பயா பாதுகாப்பான நகர நிதி திட்டத்தின் கீழ் சென்னையில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  நிலையில் பேருந்துகளின் கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் விதமாக சென்னை பல்லவன் இல்லத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


மத்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் படி மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக  நிர்பயா நிதி  திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமிராக்கள் மற்றும் பேனிக் பட்டன்கள் பொருத்தும் பணிகள் சென்னை மாநகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் பேருந்துகளின் கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் விதமாக சென்னை பல்லவன் இல்லத்தில்  ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. 

இதனை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின் படி  2500 பேருந்துகள் , பேருந்து நிலையங்கள் பணிமனைகள் என 66 இடங்களில் கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

72.25 கோடி மதிப்பீட்டில் மாநகர பேருந்துகளில் 3 கேமிரா , 4 பேனிக் பட்டன் , செயற்கை நுண்ணறிவு வீடியோ ரெக்கார்டர் உடன் கூடிய கருவிகள் பெருத்தபட்டு பல்லவன் இல்லத்தில் புதிதாக கட்டபட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் கண்காணிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் காணாமல் போனவர்களை அவரது பயண நேரத்தை வைத்து சிசிடிவி மூலம் கண்டறியவும் , குற்றவாளிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் அடையாளம் காணவும் , பெண்கள் பேனிக் பட்டன்களை அழுத்திடும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக குற்ற செயலையில் ஈடுபடுவோர்களை உடனடியாக கண்டறியும் வகையில் போக்குவரத்துறையினர் மற்றும் காவல்துறையினரை ஒருங்கிணைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இதுவரை 500 பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள  நிலையில் இதற்கான கட்டளை மையம் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்