Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Virudhunagar Mavattam : பட்டாசு தொழிச்சாலையில் விதிமீறல்..? ஆட்சியர் எச்சரிக்கை..!

Muthu Kumar May 20, 2022 & 10:25 [IST]
Virudhunagar Mavattam : பட்டாசு தொழிச்சாலையில் விதிமீறல்..? ஆட்சியர் எச்சரிக்கை..!Representative Image.

Virudhunagar Mavattam : விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிச்சாலையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பட்டாசு தொழிச்சாலை சம்பந்தமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிச்சாலையில் பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுக்கள் மூலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அணைத்து பட்டாசு உற்பத்தி ஆலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறலில் ஈடுபட்ட 406 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அதிக அளவிலான விதிமீறலில் ஈடுபட்ட174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக ஆய்வு குழு மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்