Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டால் காவல்துறையை நாட வேண்டும்...அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுரை.!

madhankumar May 16, 2022 & 09:53 [IST]
பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டால் காவல்துறையை நாட வேண்டும்...அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுரை.!Representative Image.

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தில் கூறியிருப்பதாவது, 

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பேருந்துகளில் 3 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்ற பயணிகளாலோ அல்லது வேறு ஏதேனும் சிரமம் ஏற்படும்போதும், மற்றும் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு மற்றவர்களால் அச்சுறுத்தல் ஏற்படும்போதும், குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும்போதும் இந்த அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி தகவல்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கட்டளை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கும்.செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பேருந்து நடத்துநர் காவல் துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் 9445030570 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, புகார் தெரிவிக்க வேண்டும். தலைமையக கட்டுப்பாட்டு மையம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது, மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்