Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி டப்பிங் படங்களுக்கு ஆப்பு; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு! 

KANIMOZHI Updated:
இனி டப்பிங் படங்களுக்கு ஆப்பு; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு! Representative Image.

டப்பிங் படங்களுக்கு இனி அதிக பங்குத்தொகை கிடையாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கில மற்றும் டப்பிங் படங்களுக்கு விநியோகிஸ்தர் பங்குத்தொகை 55%-க்கு மேல் வழங்கப்பட போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் டப்பிங் படங்களுக்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக 55 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

கடந்த 16 ஆம் தேதி வெளியான ஹாலிவுட் படமான அவதார்-2 படத்திற்கு 70% பங்கு கேட்டதால் தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. அதிக பங்கு தொகை வழங்க முடியாது எனவும் திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் எங்களுடைய திரையரங்குகளில் அவதார் 2 திரைப்படம் திரையிடப்படவில்லை எனவும் படம் வெளியான நாளில் திரையரங்க உரிமையாளர்கள் சமூக வலைதள பக்கம் மூலமாக அறிவிப்பை வெளியிட்டனர்

விநியோகிஸ்தர் பங்கு தொகை அதிகம் கேட்டதன் எதிரொலியாக இனி தமிழகத்தில் வெளியாகும் எந்த டப்பிங் படங்களுக்கும் 55%-க்கு மேல் பங்குத்தொகை வழங்க முடியாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்