Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

25 Years of Suriya: நடிப்பின் நாயகன் சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்...

Nandhinipriya Ganeshan September 06, 2022 & 10:35 [IST]
25 Years of Suriya: நடிப்பின் நாயகன் சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்...Representative Image.

நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சூர்யா, சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளார். 

பிரபல இயக்குநர் வசந்த் இயக்க, மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த படம் தான் நேருக்கு நேர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நம்ம சூர்யா. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் விஜய், சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தனர். 

சூர்யாவின் 25 வருட சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்த நேருக்கு நேர், அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய பராட்டை தேடி தந்தது. சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

தற்போது, அவரது 25 ஆண்டு கால திரைப் பயணத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி 25 years of suriya, suriya உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. 

Suriya 25, 25 years of suriya, suriya's first movie name


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்