Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் 7ஜி ரெயின்போ காலணி...! அதிரடி அப்டேட்...!

UDHAYA KUMAR Updated:
மீண்டும் 7ஜி ரெயின்போ காலணி...! அதிரடி அப்டேட்...!Representative Image.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. 

கதிர், அனிதா, லக்ஷ்மிநாராயணன் - இந்த கதாபாத்திர பெயர்களை மறந்துவிட முடியுமா. இரண்டாவது படத்திலேயே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற செல்வராகவன், அப்போதைய புது வரவுகளில் மிகச் சிறந்த இயக்குநராக திகழ்ந்தார், இயக்குநர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாவது இவருக்கும் தொடர்ந்தது. 

கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி தனித்துவமான படமாக அமைந்தது இந்த படம். மேலும் இசைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் யுவன் சங்கர் ராஜாவின் உருக வைக்கும் இசையும் படத்துக்கு பிளஸ்ஸாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வராதா என ரசிகர்கள் காத்திருந்தனர். 

இப்போது அதற்கான அறிகுறிகள் தெரிய வருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணாவே இந்த பாகத்திலும் நடிக்க இருக்கிறாராம். சோனியா அகர்வால் பாத்திரம் இறந்துவிட்டதால், இம்முறை புதிய ஒரு கதாநாயகியைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். மற்றபடி படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே வரவிருக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்