Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல்.. வெளியானது நானே வருவேன் டீசர்!!

Sekar September 15, 2022 & 20:07 [IST]
வேற லெவல்.. வெளியானது நானே வருவேன் டீசர்!!Representative Image.

நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, படம் வெளியாகும் தேதியை வெளிப்படையாக குறிப்பிடாமல் செப்டம்பர் 2022இல் வெளியாகும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். 

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தான் நானே வருவேன். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பிகளாக தனுஷ் நடிப்பதாகவும் அண்ணன் நல்லவராகவும், தம்பி பழிவாங்குபவராகவும் வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளது.

மேலும் சமீபத்தில் நடிகர் அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் செல்வராகவனும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகளும் டீசரில் இடம்பிடித்துள்ளன. 

முதலில் படத்தை பொன்னியின் செல்வன் வெளியாகும் அன்றே வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டதாகவும், பின்னர் பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு ஒருநாள் முன்னதாக வெளியிடலாம் என்றும் யோசித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது டீசரில் படத்தின் வெளியீட்டு தேதியை முழுமையாக குறிப்பிடாமல், செப்டம்பர் 2022'இல் வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். இதனால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்